![]() |
அகவிலைப்படி என்றால் பொருட்களின் விலை ஏற்றத்தை கணக்கிட்டு அடிப்படை சம்பளத்துடன் சேர்த்துக் கொடுப்பது ஆகும்.
2017ல் சம்பள கமிஷன் அறிக்கை யில் அப்போதுள்ள அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து ஒவ்வொரு கிரேட் அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போதுள்ள அகவிலைபட புள்ளிகள் பூஜ்யம் ஆகிவிடும். அதற்கு பிறகு விலையேற்றத்தின்படி புள்ளிகள் இடப்படும். அதற்கேற்ப 3 அல்லது 6 மாதங்ஙளுக்கு ஒருமுறை அகவிலைப்படி மாறும். முதலில் அடிப்படை சம்பளம் என்றால் என்ன, காலமுறை ஊதியம் என்றால் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
ஒருவரின் Scale of Pay 5500-175-9000 என்றால் என்ன?. அப்படி என்றால் அவர் பணியில் சேரும் பொழுது முதலில் அளிக்கப்படும் அடிப்படை சம்பளம் 5500. இது தான் அடிப்படை. இதை வைத்து தான் அவரின் அகவிலைப்படி (பழைய பெயர் பஞ்சப்படி - Dearness Allowance - DA), Dearness Pay, வீட்டு வாடகை, பிறப்படிகள், அவர் வெளியூர் சென்றால் வழங்கப்படும் தினப்படி எல்லாம் தீர்மானிக்கப்படும். 175 என்பது அவரின் வருடாந்திர ஊதிய உயர்வு (Increment). பணவீக்கத்தால் செலவுகள் அதிகரிக்கும் போது அதனைக் கட்டுப்படுத்த அகவிலைப்படியை உயர்த்தி அளித்து அதனைக் குறைப்பதே அகவிலைப்படியாகும்.
விலைவாசி நிலையாக இருப்பது நல்லது. ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு. காரணம் சந்தை பொருளாதாரக் கொள்கைகள். இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ இயலாது. எனவேதான் விலைவாசி உயர்வை ஓரளவுக்கு ஈடுகட்ட கொடுக்கப்படும் தொகை அகவிலைபடி ஆகும். இதனால் உணவுப்பொருள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் மீதான விலைவாசி உயர்வு ஓரளவிற்கு சமாளிக்கப்படும். அரசு ஊழியர்களை பொருத்தவரையில் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே அகவிலைப்படி ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். Dearness allowance என்று அகவிலைப்படி ஆங்கிலத்தில் கூறுவார்கள். மேலும், இந்த Consumer price index அடிப்படையாகக் கொண்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாறுதலுக்கு உண்டாகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக