![]() |
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 4% ஆக இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 4% சம்பளம் உயர்ந்தால் ஊழியர்களின் சம்பளம் மாதம் எவ்வளவு உயரும் என்பது குறித்து பார்க்கலாம்.
அகவிலைப்படி உயர்வு குறித்த ஏஐசிபிஐ புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இம்முறையும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்துகிறது.தொழிலாளர் பணியகம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை கணக்கிடுகிறது. இது நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 4% அகவிலைப்படி உயர்வால், தற்போது ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18000 எனில், அவருக்கு 42 சதவீதம் என்ற அடிப்படையில் அகவிலைப்படி ரூ.7560 சம்பளமாக கிடைக்கும். அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரித்தால், அகவிலைப்படி மாதம் ரூ.8280 ஆக உயரும். அதன்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் ரூ.720 அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவதை போலவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், கடும் நெருக்கடி, கடன் சுமை மற்றும் கொரோனாவினால் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்ற காரணத்தினால் தமிழக அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வினை வழங்கப்படாமலேயே இருக்கிறது. எனவேதான், தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.. அதன்படியே, 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் தமிழக அரசு ஊழியர்களுக்கு இம்முறையும் 4% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மாதம் ரூ.25,500 என்றால், ஊழியரின் அகவிலைப்படி 10,710 ஆக உயரக்கூடும்.. அதாவது, ஊழியருக்கு ரூ.1,020 கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டது. இதனிடையே, தமிழக அரசு ஊழியர்களுக்கு மறுபடியும் அகவிலைப்படி உயரும் என்ற தகவல் வட்டமடித்தது. அதாவது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 4% அகவிலைப்படியானது, 2023 ஏப்ரல் 1ம் தேதி கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜனவரி மாதம் உயர்த்த வேண்டிய அகவிலைப்படியை, காலதாமதமாக, அதாவது மே மாதம் உயர்த்தி அறிவித்திருந்தது.. இதனால் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி எப்போது கிடைக்கும்? என்ற கேள்வியும் அன்றே எழுந்தது. ஜூலை மாதத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று சொல்லப்படும் நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக