![]() |
ஒரு
மனை அல்லது நிலம் வாங்குவது என்பது நீண்டகால முதலீடு. அப்படிப்பட்ட நீண்ட
கால முதலீட்டை செய்யும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
இப்போதெல்லாம் ஒரு மனை அல்லது வீட்டின் மேல் இரட்டை பதிவுகள் இருப்பது சாதாரணமாகிவிட்டது. அப்படிப்பட்ட சொத்தை நாம் தெரியாமல் வாங்கிவிட்டால் சிக்கல் தான். அதனால் தான் சொத்தை வாங்குவதற்கு முன்னரே அந்த சொத்து யார் பெயரில் இருக்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதை எப்படி செய்வது என்பதற்காகத்தான் இந்தப் பதிவு.
முன்பெல்லாம், நாம் வாங்க இருக்கும் நிலத்தின் உரிமையாளர் தொடர்பான தகவலை கிராம நிர்வாக அதிகாரியிடம் விசாரிக்க வேண்டும். ஆனால் தற்போது அந்த விவரங்களை வருவாய்த் துறை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் நாம் வாங்க இருக்கும் நிலத்தின் உரிமையாளர் தொடர்பான விபரங்களை நாமே நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். ஆன்லைன் செயல்முறையின் மூலம், நீங்கள் பட்டா, சிட்டா நகல் போன்றவற்றின் பதிவுகளைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இரண்டு நிமிடங்களில் நிலம் தொடர்பான எந்தத் தகவலையும் வருவாய்த் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நாம் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு முன்பு, நாம் வருவாய்த் துறை அதிகாரிகளின் உதவியை நாட வேண்டியிருந்தது. ஆனால் இப்போது சில நிமிடங்களில் வீட்டில் உட்கார்ந்த படியே இந்தத் தகவலைப் பெறலாம். எப்படி தெரிந்து கொள்வது என்பதை இப்போது பார்க்கலாம். அதற்கான வழிமுறைகள் இதோ..
- முதலில் மாநில வருவாய்த் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
- பிறகு உங்கள் மாவட்டத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
அதன் பிறகு, தாலுகாவின் பெயரை தேர்வு செய்ய வேண்டும். - இப்போது நீங்கள் நிலத்தைப் பற்றி அறிய விரும்பும் கிராமத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
- நிலத் தகவல் தொடர்பான விருப்பங்களிலிருந்து 'நில உரிமையாளரின் பெயரைத் தேடு' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது நிலத்தின் உரிமையாளரின் பெயரின் முதல் எழுத்தைத் தேர்ந்தெடுத்து தேடல் பொறியை கிளிக் செய்யவும்.
- கொடுக்கப்பட்ட பட்டியலில் இருந்து நிலத்தின் உரிமையாளரின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது கேப்ட்சா குறியீட்டை சரிபார்க்கவும்.
சரிபார்க்கப்பட்டதும், நிலம் தொடர்பான விவரங்கள் திரையில் வரும்.
இதில், சர்வே எண்ணுடன், அந்த கணக்குதாரரின் பெயரில் எவ்வளவு நிலம் உள்ளது என்ற அனைத்து விவரங்களும் கிடைத்து விடும்.
இதன் மூலம் நீங்கள் வாங்க நினைக்கும் சொத்தின் உண்மைத் தன்மை மற்றும் உரிமையாளர் தொடர்பான நம்பகமான தகவல்கள் உங்களுக்கு தெரிய வரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக