![]() |
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு வரும் 22ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பல சிறப்பம்சங்களை கொண்ட ஆலயங்கள் இருக்கின்றன. அந்த கோவில்களில் விசேஷம் என்றால் அந்த மாவட்டம் முழுவதும் அந்த கொண்டாட்டம் எதிரொலிக்கும். அப்படி மிகப் பிரமாண்டமான, பிரபலமான ஆலயங்களில் ஏதாவது விழா என்று வந்துவிட்டால், அந்த பகுதிகளில் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்.
அந்தவகையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் பூரம் நட்சத்திர தினத்தன்று தேரோட்டத் திருவிழா ஜூலை மாதம் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த விழாவில் பொதுமக்கள் அதிகம் கலந்து கொள்வார்கள் என்பதால், வரும் 22ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக