![]() |
டெட் தேர்வு வழக்கு தற்போதைய நிலவரம்
🎯29.7.2011 ககு முன்பே பணி நியமனம் பெற்று, TET தேர்ச்சி பெறாமல் பணியாற்றிக் கொண்டும் இருக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் தொடர்வதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை என நீதியரசர்கள் மகாதேவன் shafeeq அமர்வு உத்தரவிட்டது.
🎯ஆனால் பணியில் தொடர்வதற்கு TET அவசியம் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசர் ஜிஆர் சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது
தகுதித் தேர்வு குறித்து இரு மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதால், *தற்போது தகுதி தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேவையா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வுக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக