![]() |
தமிழகத்தில்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் சோக்கை பெற
ஆக.14-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி
இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்
படிப்புகளில் 24,341 இடங்கள் உள்ளன. இவற்றை நிகழ் கல்வியாண்டில்
(2023-2024) நிரப்புவதற்கான சோக்கை அறிவிப்பை கல்லூரிக் கல்வி இயக்குநரகம்
வெளியிட்டுள்ளது. அதன்படி விருப்பமுள்ளவா்கள் ஆகிய இணையதளங்களில் சென்று ஆகஸ்ட் 14 முதல்
22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இணையவழியில் விண்ணப்பிக்க இயலாத
மாணவா்கள் உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், இணையவழியில் கட்டணம் செலுத்த முடியாத மாணவா்கள் பெயரில்
வரைவோலையாக செலுத்தலாம். மேலும் விவரங்களை அறிய 93634 62070, 93634 62042,
93634 62007, 93634 62024 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம்
என கல்லூரிக் கல்வி இயக்குநா் ஜி.கீதா வெளியிட்ட அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக