Educational And Employment News

ஜூலை 15, 2023

குழந்தைகள் மற்றும் டீனேஜ் பிள்ளைகள் இடையே அதிகரிக்கும் சிறுநீரக கற்கள் பிரச்சனை..! காரணங்கள் என்ன..?

 

குழந்தைகள் மற்றும் டீனேஜ் பிள்ளைகள் இடையே அதிகரிக்கும் சிறுநீரக கற்கள் பிரச்சனை..! காரணங்கள் என்ன..?
சுமார் 20 - 25 ஆண்டுகளுக்கு முன் கிட்னி ஸ்டோன் எனப்படும் சிறுநீரகத்தில் கற்கள் இருக்கும் பிரச்சனை நடுத்தர வயதினர் அல்லது வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையாக இருந்து வந்தது.
ஆனால் சுமார் கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகள் மற்றும் டீனேஜ் பருவத்தினருக்கு கூட இந்த பிரச்சனை வருவது என்பது சகஜமாகிவிட்டது.

சிறுநீரக கற்கள் என்ற பிரச்சனை எந்த வயதினருக்கும் ஏற்பட கூடிய பொதுவான நிலையாக மாறி விட்டது என்றாலும் சமீப ஆண்டுகளாக குழந்தைகள் குறிப்பாக பதின்ம வயதினரிடையே இந்த பாதிப்பு பரவலாக அதிகரித்துள்ளது நிபுணர்களை கவலையடைய செய்துள்ளது. இதில் மற்றொரு அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் சில சந்தர்ப்பங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கூடசிறுநீரக கற்களால் பாதிக்கப்படுகின்றனர்.

சிறுநீரக கற்கள் என்றால் என்ன..?

சிறுநீரக கற்கள் என்பது மினரல்ஸ் மற்றும் உப்புகள் படிந்து கடினமான பொருளாக தேங்குவது ஆகும். இவை சிறுநீர்ப்பை, சிறுநீரகங்கள் இந்த இரண்டில் எங்கு வேண்டுமானாலும் உருவாகலாம். மேலும் இது ஒரு வளர்சிதை மாற்ற கோளாறு ஆகும், இது Nephrolithiasis என்றும் அழைக்கப்படுகிறது. சிறுநீரில் இருக்கும் கால்சியம், ஆக்ஸலேட் மற்றும் பாஸ்பரஸ் போன்ற மினரல்ஸ் குவிந்து ஒன்றிணைந்து கடினமான மஞ்சள் நிற படிகங்களை உருவாக்குகின்றன.

சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரக குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் உருவாக கூடும். சில நேரங்களில் இந்த கிறிஸ்டல்கள் ஒரு மணல் துகள் போல சிறியதாக இருக்கலாம் தீவிர சந்தர்ப்பங்களில் ஒரு கோல்ஃப் பால் போல் பெரிய கிரிஸ்டலாகவும் உருவாகியிருக்கலாம். சிறிய அளவிலான கற்கள் சிறுநீர் பாதை வழியே எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியேறும் என்றாலும் பெரிய சைஸ் படிகங்கள் உள்ளுக்குளேயே சிக்கி, சிறுநீர் ஓட்டத்தை தடுத்து கடும் வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்பட வழிவகுக்கும்.



குழந்தைகளுக்கு சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான சில காரணங்கள் இங்கே:

டயட் மற்றும் கிட்னி ஸ்டோன்ஸ்:

இந்த காலத்து குழந்தைகள் சிறு வயதிலேயே ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டு வருகிறார்கள். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி இந்த ஆரோக்கியமற்ற பழக்கம் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு சிறுநீரக கற்கள் ஏற்பட காரணமாக இருக்கலாம். குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு சிப்ஸ், சாண்ட்விச் மீட்ஸ், ஸ்போர்ட் ட்ரிங்க்ஸ் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் போன்றவற்றில் காணப்படும் அதிக அளவு சோடியம் காரணமாக சிறுநீரில் கூடுதல் தாதுக்கள் சேர்கின்றன, இது சிறுநீரக கற்களாக உருவாகலாம். இதற்கிடையே குழந்தைகள் தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சிறுநீரக கார்களுக்கான ஆபத்து அதிகரிக்கிறது.

கோடைகாலத்தில் அதிக சிறுநீரக கற்கள்.!

வெப்பம் தகிக்கும் கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு அதிகளவில் சிறுநீரகக் கற்கள் உருவாவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் கிளைமேட் அதிக சூடாக இருப்பதால் அதிகமாக வியர்ப்பதோடு, சிறுநீர் கழிப்பதும் குறைகிறது. இது சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் தாதுக்கள் படிய வழிவகுக்கும்.


ஆன்டிபயாடிக்ஸ்:

பிரபல சிறுநீரக மருத்துவர் Gregory Tasian குறிப்பிடுகையில், பொதுவாக ஆன்டிபயாடிக்ஸ் குடல் நுண்ணுயிரியை (gut microbiome) சிறுநீரகக் கல் வளர்ச்சிக்கு சாதகமாக மாற்றக்கூடும். ஆய்வு ஒன்றில் பொதுவாக பரிந்துரைக்கப்படும் 5 ஓரல் ஆன்டிபயாடிக்ஸ்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டவர்கள் சிறுநீரக கற்களை உருவாக்கும் வாய்ப்புகளில் 1.3 முதல் 2.3 மடங்கு அதிகரிப்புடன் தொடர்புடையவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆன்டிபயாடிக்ஸ் எடுத்த பின் காலப்போக்கில் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதற்கான ஆபத்து குறைந்தாலும், மருந்தை உட்கொண்ட பிறகு 5 வருடங்கள் வரை கிட்னி ஸ்டோன் ஏற்படுவதற்கான ரிஸ் க் அதிகமாகவே இருந்ததை ஆயவு வெளிப்படுத்தியது.



சிறுநீரக கற்கள் உருவாகாமல் எப்படி தவிர்ப்பது..?

சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான சிறந்த வழி, அதிக அளவு தண்ணீர் குறிப்பாக கோடைக் காலத்தில் குடிப்பதே. உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். உங்கள் சிறுநீரின் நிறம் light lemonade கலரில் இருந்தால் நீங்கள் நன்கு ஹைட்ரேட்டாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template