Educational And Employment News

ஜூலை 15, 2023

ஹெல்த் இன்சூரன்ஸ் நிராகரிக்கப்படுவதற்கு காரணங்கள் தெரியுமா? கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை..!

 

ஹெல்த் இன்சூரன்ஸ் நிராகரிக்கப்படுவதற்கு காரணங்கள் தெரியுமா? கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை..!

திர்பாராமல் ஏற்படக்கூடிய மருத்துவ செலவுகளை மன தைரியத்தோடு சமாளிக்க அத்தியாவசியமாக கருதப்படுவது ஹெல்த் இன்சூரன்ஸ்.
இது ஒரு நபருக்கு பொருளாதார ரீதியாக பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது. ஆனால் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்திருப்பவர்கள், தேவையான சமயத்தில் கிளைம் செய்யும் பொழுது அந்த கிளைம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். கிளைம்கள் நிராகரிக்கப்படுவதற்கான சாத்தியமான காரணங்களை தெரிந்து வைத்துக் கொள்வது ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவும். இதன் மூலமாக தேவையற்ற கவலைகளையும் பொருளாதார சிக்கல்களையும் ஒருவர் தவிர்க்கலாம். மேலும் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்திருந்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டதே என்று சொல்ல வேண்டிய அவசியமும் ஏற்படாது.

பாலிசியை வாங்கும் பொழுது சரியான விவரங்களை அளிக்க வேண்டும்:


ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்கும் பொழுது மிகச்சரியான மற்றும் முழுமையான தகவல்களை அளிப்பது மிகவும் அவசியம். ஒருவர் தங்களுக்கு இருக்கக்கூடிய நோய்கள், இதற்கு முன்பு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள், எடுத்துக்கொண்ட மருந்துகள் மற்றும் பல போன்ற தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும். இதுபோன்ற விவரங்களை பாலிசி வாங்கும்பொழுது தர மறுத்து விட்டால், உங்களது கிளைம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் சில நேரங்களில் உங்கள் பாலிசி கேன்சல் ஆகக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படலாம்.

பாலிசி விதிகள் மற்றும் நிபந்தனைகளை புரிந்து கொள்ளுதல்:

பாலிசி குறித்த விதிகள் மற்றும் நிபந்தனைகளை முழுவதுமாக படித்து புரிந்து கொண்ட பிறகே ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க வேண்டும். இந்த பாலிசி எந்தெந்த விஷயங்களுக்கு கவரேஜ் வழங்குகிறது, காத்திருப்பு நேரம், விலக்குகள் (Exclusions) மற்றும் கிளைம் செய்வதற்கான விதிமுறைகள் போன்ற விஷயங்களுக்கு கூடுதல் கவனம் அளிக்க வேண்டும். ஒரு சில நேரங்களில் பாலிசி ஆவணங்களில் உள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகள் அதிக எண்ணிக்கையிலான பக்கங்களில் கொடுக்கப்பட்டு இருப்பதால், அதனை படிக்க பலர் தவறி விடுகின்றனர். ஆனால் இவ்வாறு செய்வது கிளைம் செட்டில்மெண்ட் சமயத்தில் பல பிரச்சனைகளை உண்டாக்கலாம். ஆகவே நீங்கள் எடுக்கக்கூடிய பாலிசி குறித்த முழு விவரங்கள் பற்றி தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.

கிளைம் தாக்கல் செய்யும்பொழுது வெளிப்படையாக நடந்து கொள்ளுதல்:

ஹெல்த் இன்சூரன்ஸூக்கான கிளைம் தாக்கல் செய்யும்பொழுது, தேவையான ஆவணங்கள், மெடிக்கல் ரிப்போர்ட்கள், பில்கள் மற்றும் பிரிஸ்கிரிப்ஷன் போன்றவற்றை வெளிப்படையாக சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை சமர்ப்பிக்கும் முன்பு அவை சரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறைக்கு இரு முறை சரி பார்க்க வேண்டும். ஏனெனில், ஏதேனும் தகவல்கள் தவறாக இருந்தாலோ அல்லது விவரங்கள் கொடுக்கப்படாமல் இருந்தாலோ உங்களது கிளைம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கிளைம் ஆவணங்களை சரியான நேரத்தில் சமர்ப்பித்தல்:


கிளைம் சார்ந்த ஆவணங்களை இன்சூரன்ஸ் வழங்குநர் குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் சமர்ப்பிப்பது அவசியம். தாமதமாக சமர்ப்பித்தால் கிளைம் ரிஜெக்ட் ஆகிவிடலாம். ஆகவே ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் என்ன என்பதை டிராக் செய்து, சரியான நேரத்தில் அவற்றை சமர்ப்பிப்பது உதவக்கூடும்.

சந்தேகங்களை இன்சூரரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுதல்:

கிளைம் செயல்முறை, பாலிசி கவரேஜ் அல்லது கிளைம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் போன்றவை குறித்த சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொள்ள இன்சூரன்ஸ் வழங்குனரை அணுக வேண்டும். இவற்றை தெளிவுபடுத்திக் கொள்ள கூச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. வாடிக்கையாளர்களுக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களை தீர்ப்பதற்காகவே இன்சூரன்ஸ் வழங்குனர்கள் தனிப்பட்ட முறையில் அதிகாரிகளை நியமித்துள்ளனர்.

ரெக்கார்டுகள் மற்றும் ரசீதுகளை பத்திரப்படுத்தி வைத்தல்:


எந்தவொரு மெடிக்கல் ரிப்போர்ட்டுகள், பில்கள், ரசீதுகள் மற்றும் இது சம்மந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் பத்திரமாக வைத்து, கிளைம் தாக்கல் செய்யும் சமயத்தில் இன்சூரன்ஸ் வழங்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு வேலை கிளைம் ரிஜெக்ட் ஆகி விட்டால், இது போன்ற ஆவணங்கள் உங்களுக்கு ஆதாரமாக செயல்படக்கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template