![]() |
நாளை
சென்னை கல்வி மாவட்டத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும்
என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் அறிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த ஜூன் 19ஆம் தேதி மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட
நிலையில், அதனை ஈடு செய்யும் வகையில் 6முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
மார்க்ஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "
கனமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப்
பள்ளிகளுக்கும் 19.06.2023 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அப்பணி நாளை
ஈடு செய்திடும் வகையில் 22.07.2023 அன்று (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில்
செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6
முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திங்கள் கிழமை பாடவேளையினை
பின்பற்றி முழு பணி நாளாக செயல்படுமாறு அனைத்து வகை பள்ளித்
தலைமையாசிரியர்கள் /முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக