![]() |
பள்ளி துவங்கி ஒரு மாதம் ஆன நிலையிலும், வகுப்பு கையாள்வதை விட, புள்ளிவிபரங்களை திரட்டுதல், பதிவேற்றுதல் பணிக்கே கூடுதல் நேரம் செலவிட வேண்டியிருப்பதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.பள்ளிக்கல்வித்துறையில், புதிய திட்டங்கள், அறிவிப்புகள், மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்க, பள்ளிக்கல்வி மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளத்தில் இருந்து, புள்ளிவிபரங்கள் திரட்டுவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் இதை பதிவேற்றினாலும், ஒருங்கிணைத்து பெறுவதில் உள்ள
தொழில்நுட்ப குளறுபடிகளால், மாணவர்களின் விபரங்கள், அவ்வப்போது புதிதாகவே
பெறப்படுகிறது. இதை இணையதளத்தில் பதிவேற்றுவதற்குள் ஆசிரியர்கள்
படாதபாடுபடுகின்றனர்.குறிப்பாக, தொடக்க கல்வித்துறையில் இருந்து
பள்ளிகளுக்கு, அலுவலக பணிகளுக்கென ஒரு கம்ப்யூட்டர் மட்டுமே
வழங்கப்பட்டுள்ளது. நெட்வொர்க் பிரச்னையால், ஆன்லைனில் தகவல்கள்
பதிவேற்றினாலும், உள்ளீடு செய்வதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. இதனால்,
கற்பித்தல் பணிகள் வெகுவாக பாதிக்கப்படுவதாக, பலரும்
குமுறுகின்றனர்.இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:எண்ணும் எழுத்தும்
சிலபஸில், மாணவர்களுக்கான செயல்வழி விளக்கம் அதிகமாக உள்ளது.
இதை புரியும்படி விளக்கினால் தான், அடிப்படை கற்றலை வலுப்படுத்த முடியும். ஆனால், கல்வித்துறையில் இருந்து, நாள்தோறும் ஒரு உத்தரவு பிறப்பித்து, புள்ளிவிபரங்களை இணையதளத்தில் பதிவேற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, தினசரி மாணவர் சேர்க்கை விபரம், மாணவர்களின் உடல்நிலை குறித்த தகவல்கள், நலத்திட்ட பொருட்களின் நிலை, பழைய மாணவர்களை ஒருங்கிணைத்தல், இடைநிற்றல் தழுவியோர் விபரம், பள்ளி மேலாண்மை குழு பணிகள், காலை, மதிய உணவு சாப்பிட்டோர் விபரம், நுாலக புத்தகங்களின் இருப்பு பட்டியல் உள்ளிட்டவற்றை பதிவேற்றி வருகிறோம். இப்பணிகளுக்கு பிரத்யேக அலுவலர்களை நியமிக்காமல், ஆசிரியர்களே மேற்கொள்வதால், அதிக பணிச்சுமை நீடிக்கிறது. இச்சிக்கலுக்கு தீர்வு காணாவிடில், அடிப்படை கல்வியே ஆட்டம் காணும் நிலை ஏற்படலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மிக மோசமான கல்விச்சூழல் அரசு பள்ளிகளில் எழுந்துள்ளது. எமிஸ் இலவசங்கள் எனபன போன்ற பயனற்ற செயல்களில் ஆசிரியர்கள் உழைப்பு வீணாகிறத்.ஆண்டுக்கு மூன்று பொதுத் தேர்வு என ஆசிரியர்கள் பள்ளியில் இருப்பதில்லைபயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கே பயிற்சி பயிற்சி என வீண் சிரமம். அரசு பள்ளியில் நிலமை பள்ளிக்கு பள்ளி வேறாக இருப்பதற்கேற்ற திட்டங்கள் இல்லை.ஆர் எம் எஸ்ஏ எஸ்எஸ் ஏ என உளுத்து போன திட்டங் கள்.எப்போது கல்வித்துறை சரியாகும்?
பதிலளிநீக்கு