![]() |
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்த கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, உடற்கல்வி ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க மாநில தலைவர் சங்கரபெருமாள் வெளியிட்ட அறிக்கை: அரசு பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஏற்கனவே நடத்தப்பட்டு, இடைநிலை ஆசிரியர்கள் முதல், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் வரை இடமாறுதல் வழங்கப்பட்டது.
ஆனால், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் பணி இடமாறுதல் கவுன்சிலிங்
நடத்தப்படவில்லை. பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்த
வேண்டும். உடற்கல்வி தொடர்பான திறனாய்வு சோதனைகள் நடத்த வேண்டும். மாநில,
தேசிய போட்டிகளுக்கு, மாணவர்களை தயார்படுத்த வேண்டும். இதற்கு ஏற்ப பணியிட
மாறுதல் வழங்குவதுடன், அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள்
இருக்குமாறு, பணி மாறுதல் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, அடுத்த மாதம்
பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் முன், உடற்கல்வி ஆசிரியர்களின் கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக