![]() |
அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்று தேர்ச்சி பெறும் மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் நடத்தி தேர்வு செய்யப்படும் சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர்விருது வழங்கி, ஒவ்வோரு மாவட்டத்திலும் 10 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் 15சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ரூ.10,000/- ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சன்றிதழும், ஒவ்வோரு மாவட்டத்திலும் 12 ஆம் வகுப்பில் பயிலும் சிறந்த 15 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ரூ.20,000/- ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது 2023-2024 ஆம் ஆண்டிற்கான திட்ட மதிப்பீட்டில் பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கென தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க ரூபாய் 1,72,55,000/- பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
எனவே 2022-2023 ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராஜர் விருது பெற தகுதியுள்ள மாணவர்களினை தேர்வு செய்து அம்மாணவர்களின் பெயர் பட்டியலினை பள்ளிக் கல்வி இயக்ககத்திறகு உடனடியாக அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக