![]() |
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ்இயங்கும் அரசு / அரசு நிதியுதவி பெறும் நகராட்சி / மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணனியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
2023-2024 ஆம் ஆண்டிற்கு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பெற்று வழங்கிட, TNSED Schools இல் App login செய்து உள்ளீடு செய்ய தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி இவ்வாண்டும் பழைய நடைமுறையினை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.
எனவே, 2023-2024-ஆம் கல்வி ஆண்டிற்கு அரசு/அரசு நிதியுதவி பெறும் நகராட்சி, மாநகராட்சி உயர்/மேல்நிலை பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பெற மாணவ, மாணவியர்களின் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பெற்று பள்ளி தலைமை ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டல போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் உடன் சமர்பித்திட நடவடிக்கை எடுக்குமாறு அணைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக