![]() |
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூரம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த சித்தர் பீடத்தில் 1972 முதல் ஆடிப்பூரம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரம் நாளில் வேள்வி பூஜைகள் நடத்தப்படும். பக்தர்கள் கஞ்சிக்கலயம் சுமந்து வந்து அன்னையிடம் வேண்டுதல் வைத்து வழிபடும். அத்துடன் பாலாபிஷேகமும் செய்வர்.

அந்த வகையில் 52வது ஆடிப்பூரம் விழா நடப்பாண்டில் கோலாகலமாக ஜூலை 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை என தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது. இது மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடிப்பூர திருவிழாவில் கலந்து கொள்வர்.

இந்நிலையில் மேல்மருவத்தூர் கோவிலில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார். இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஜூலை 21ம் தேதி வெள்ளிக்கிழமை ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 5ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக