![]() |
2022-23
நிதியாண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்யும் அவகாசம் நேற்றுடன் முடிந்த
நிலையில் 6 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் தாக்கல் செய்துள்ளனர்.
இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதுவரை இல்லாத
உச்சபட்ச அளவாக நேற்று மாலை வரை மட்டும் ஆறரை கோடி பேர் தங்கள் வருமான வரி
கணக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 36
லட்சத்து 91 ஆயிரம் பேர் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில் 5 கோடியே 89 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்தது உச்சமாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 5 கோடியே 83 லட்சமாக குறைந்தது.
இந்த நிலையில், கடைசி நாளான நேற்று மட்டும் 1 கோடியே 78 லட்சம் முறை வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மக்கள் லாகின் செய்திருக்கின்றனர். வரிவிலக்கு வரம்பில் இருப்போர் நேற்று கணக்கை தாக்கல் செய்யாதபட்சத்தில் அவர்கள் இன்று முதல் அபராத தொகையான ஆயிரம் ரூபாய் செலுத்தி கணக்கை தாக்கல் செய்யலாம்
வரி செலுத்த தகுதியுள்ளோர் நேற்றே வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதபட்சத்தில் அவர்கள் அபராதம் மற்றும் கூடுதல் கட்டணத்துடன் வருமான வரியை தாக்கல் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக