Educational And Employment News

ஜூலை 13, 2023

RBSK - மாணவர்களது அடிப்படை விவரங்களை TNSED SCHOOL APP செயலியில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்

 

 



பள்ளிக் கல்வி - பள்ளி மாணவர்களின் உடல்நலம் பேணுதல் தேசிய சுகாதார இயக்கம் - RBSK அடிப்படை விவரங்கள் திரட்டுதல் TNSED SCHOOL APP செயலியில் விவரங்கள் பதிவிடக் கோருதல் சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் :


RBSK Survey Instructions pdf - Download here


கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களின்படி , இப்பணிகளை TNSED School APP , Health and Well.being செயலியின் மூலம் மேற்கொள்ள வேண்டும் . 


1 emistnschoolsgovin ல் மூலம் தலைமை ஆசிரியர்கள் வகுப்பையும் அதற்கான வகுப்பு ஆசிரியரையும் தேர்வு செய்தல் வேண்டும் . 


2. சோதனை செய்யும் வகுப்பு ஆசிரியர்கள் other class screening module யை தேர்வு செய்து இப்பணியினை மேற்கொள்ளுதல் வேண்டும் . 


3. மாணவர்களுடைய பெயர் , வகுப்பு மற்றும் பிரிவை ஆசிரியர்கள் தேர்வு செய்தல் வேண்டும் . 


4. மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு அதை சரிபார்த்து செயலியில் உள்ளீடு செய்தல் வேண்டும் . 


5. எடை பார்க்கும் கருவி ( Weighing Machine ) மற்றும் அளவை நாடா ( Inch Tape ) ஆகியவற்றின் மூலம் மாணவர்களின் எடை மற்றும் உயரத்தை கணக்கிடல் வேண்டும் . 


6. பதிவுகள் மேற்கொண்ட பின்பு , திருத்தம் ( Edit ) செய்ய இயலாது . 


7. ஆண் ஆசிரியர்கள் மாணவர்களையும் பெண் ஆசிரியர்கள் மாணவியர்களையும் மட்டுமே சோதனை செய்தல் வேண்டும் . 



மேலும் இப்பணியில் முன்னேற்றத்தினைத் தொடர்ந்து கண்காணித்திடவும் , இவ்விவரங்களின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதால் விரைவில் இப்பணியினை முடித்திட திட்டமிட்டு செயலாற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template