Educational And Employment News

ஜூலை 17, 2023

Kalai Arangam - School List, TeachersList, Guidelines and Materials

 



ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி - 2023-2024ஆம்‌ கல்வியாண்டில்‌ முதற்கட்டமாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 6-9 வகுப்பு மாணவர்களுக்கு கலை அரங்கம்‌ தொடங்குதல்‌ - வழிகாட்டு நெறிமுறைகள்‌ வழங்குதல்‌ சார்ந்து.


2023 - 2024 கடந்த ஆண்டைப்‌ போலவே, இவ்வாண்டும்‌ அனைத்து அரசு, நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 9 வகுப்பு பயிலும்‌ மாணவர்களுக்கு 5 கலை வடிவங்களில்‌ - நடனம்‌, நாட்டுப்புறகலை, இசை, காட்சிக்கலை, நாடகம்‌ மற்றும்‌ பொம்மலாட்டம்‌ ஆகியவற்றில்‌ பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ முதற்கட்டமாக 5038 அரசு பள்ளிகளில்‌ இத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ள கலை சார்ந்த ஆசிரியர்கள்‌ வாயிலாக 17.07.2023 முதல்‌ கலை அரங்கம்‌ பயிற்சி தொடங்கி நடத்தப்படுதல்‌ வேண்டும்

 Click Here to Download - Kalai Arangam SPD Proceeding  Date :13.07.23


Click Here to Download -  Kalai Arangam Teachers details 


Click Here to Download - Music Course materials


Click Here to Download - Visual Arts Course materials

 

 ஒவ்வொரு pums / GHS / GHSS பள்ளிகளிலும் கலையரங்கம் சார்ந்து செயல்பாடு செய்ய தகவல் வழங்கப்பட்டுள்ளது.

💥இந்த செயல்பாடு நடுநிலை பள்ளியில் உள்ள அனைத்து 6-8 வகுப்பு மாணவர்களையும் பங்கு பெறச் செய்ய வேண்டும்.
💥 இதே போல அனைத்து GHS/ GHSS பள்ளியிலும் 6 - 9 வகுப்பு மாணவர்களை கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
💥ஒவ்வொரு குழுவிலும் 6-8 (Middle)  அல்லது 6 - 9 (GHS / GHSS ) என அனைத்து வகுப்பு மாணவர்களும் கட்டாயம்  கலந்து இருக்க வேண்டும்.
💥தனித்தனி வகுப்பு என்ற நிலையில் குழு இருக்க கூடாது.


💥 அனைத்து மாணவர்களையும் குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவிலும் 40 மாணவர்கள் மட்டுமே  பங்கு பெறச் செய்ய வேண்டும்.

💥இதனை பள்ளியில் உள்ள கலை & இசை(Full Time /Part Time ) ஆசிரியர் ஒருங்கமைக்க வேண்டும். கலை & இசை ஆசிரியர் (Full Time /Part Time )இல்லாத பள்ளியில் ஒரு தனி ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும்.

💥மேலும் விபரங்களை செயல் முறை யில் உள்ளவாறு பின்பற்றிட தகவல் வழங்கப்படுகிறது.

💥மொத்தம் 9 செயல்பாடுகள் உள்ளது
1.Katchi kalai
2.Music
3.Painting
4.Paper art (Origamy)
5.Photography
6.Video Editing
7.Videi Shooting.
8.Craft Work
9.Sculpture work ..
போன்றனவாகும்.

💥முதல் இரண்டு Event  மட்டும் செயல்படுத்த வேண்டும்.
அதாவது
💐.காட்சிக்கலை
💥💥💥💥💥💥💥💥💥
1. Plaster Of Paris (POP) கொண்டு Mould செயல்பாடு செய்தல்  வேண்டும்.
2 ..முகமூடி தயாரித்தல்
3, காகித மடிப்பு கலை
4. வண்ணங்கள் அடித்தல்
5: நிறு மாணக் கலைகள்

💐இசை
💥💥💥💥💥💥💥💥💥
1 அரசமரம் பாட்டு
2. சுரங்களும் தாளங்களும்
3. தமிழ்த் தாய் வாழ்த்து
4, தமிழ்க் கும்மி
5. முடியும் என்று முழங்கு


என மேற் கண்ட இரண்டு  செயல்பாடுகளும் ஜூலை 23 / ஆகஸ்ட் 23  மாதங்களில் அனைத்து மேற்கண்ட வகை பள்ளிகளிலும்  செய்ய வேண்டும்.

💥தொடர்ந்து அடுத்தடுத்த செயல்பாடுகள் தொடரும்.


💥இந்த செயல்பாட்டிற்கிணங்க இன்றே அனைத்து நடு / உயர் / மேல் நிலைப்பள்ளி களிலும் தொடங்க வேண்டும்.
💥தொடங்கிய விபரம் BRC க்கு தெரியப் படுத்தவும்.
மேலும் விபரம் அறிய BRC ஐ தொடர்பு கொள்ளவும்.
நன்றி.



.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template