![]() |
| -''அனைத்து
பல்கலைகளிலும் ஒரே பாடத்திட்டம், தேர்வு, பணி நியமனம் மற்றும் சம்பள முறை
ஏற்படுத்தப்படும்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி
கூறினார்.தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, 13 அரசு பல்கலைகளின் துணை
வேந்தர்களுடன், அமைச்சர் பொன்முடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
துறை செயலர் கார்த்திக், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் வினய், உயர்கல்வி
மன்ற தலைவர் ராமசாமி மற்றும் துணைவேந்தர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.100
சதவீதம்அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி: தமிழகத்தில் பொதுவான பாடத்திட்டம்
அமல்படுத்துவது குறித்து, பல்கலை துணைவேந்தர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
அவர்களும் பொது பாடத்திட்டத்தை ஏற்று கொண்டனர். தமிழகத்தில் உள்ள அனைத்து
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளிலும், பொது பாடத்திட்டம் இந்த ஆண்டு
முதலே அமலாகும்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மட்டுமின்றி,
தன்னாட்சி கல்லுாரிகளும், பொது பாடத்திட்டத்தையே பின்பற்ற வேண்டும். தமிழ்,
ஆங்கிலத்துக்கு, 100 சதவீதம் பொது பாடத்திட்டம் அமலாகும். மற்ற பாடங்களில்,
25 சதவீதம் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.ஒரே பதவி, சம்பளம் தன்னாட்சி
கல்லுாரிகளுக்கும், பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவதில் எந்த
விதிவிலக்கும் இல்லை. அவர்கள் இதை ஏற்று தான் ஆக வேண்டும்.இதுகுறித்து, அந்த கல்லுாரி முதல்வர்களுடன் பேச்சு நடத்த உள்ளோம்.அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்பட்டு, ரிசல்ட் வெளியிடப்படும்.இதனால், ஒரு பல்கலையில் இளநிலை படிப்பு முடித்தவர், வேறு பல்கலையில் எளிதாக முதுநிலை படிப்பில் சேர முடியும்.வரும் காலங்களில், அனைத்து பல்கலைகளிலும், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பிற அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனங்கள், ஒரே முறையில் நடத்தப்படும். இதற்காக தனியாக குழு அமைக்கப்படும்.பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணி நிலைகள், சம்பள நிர்ணயம் போன்றவை, பல்கலைக்கு பல்கலை மாறுபடாமல், ஒரே வகையில் ஏற்படுத்தப்படும்.ஊதிய உயர்வுபுதிய கல்வி கொள்கையில் நல்ல அம்சங்கள் இருந்தால், அதை எடுத்துக் கொள்வோம்.மாநில கல்வி கொள்கை முடிவானதும், அதன் அம்சங்கள் விரைவில் அமலாகும். அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள, 4,000 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.கவுரவ விரிவுரையாளர் மாத ஊதியம், 20,000 ரூபாயில் இருந்து, 25,000 ரூபாயாக உயர்த்தப்படும்.பேராசிரியர் நியமனங்களுக்கு உரிய கல்வி தகுதியான, 'செட்' தேர்வு, விரைவில் நடத்தப்படும். ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அமலாக்க துறை 'ரெய்டு'கேள்வியால் கோபம்அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்த போது, அமலாக்க துறை விசாரணை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 'அமைச்சரின் செயல்பாடுகளை முடக்குவதற்காக, அமலாக்க துறை விசாரணை என்ற பெயரில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?' என, கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அமைச்சர் பொன்முடி கோபமானார். 'கல்வித்துறை பற்றி கேளுங்க' என, கூறினார். மீண்டும் நிருபர்கள் அதே கேள்வியை கேட்டதும், 'சட்டப்படி எல்லாம் சந்திப்போம்' என, பதில் அளித்தார். |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக