![]() |
வரகு அரிசி இருக்கா அப்போ இந்த உணவை செய்து பாருங்க.!
நம் முன்னோர்கள் எல்லாம் எண்பது வயது வரை வாழ்வதற்கு உணவு முறை முக்கிய பங்காற்றியுள்ளது.
அப்போதெல்லாம், சிறுதானியங்கள், இயற்கை முறையில் விளைய கூடியவற்றை சாப்பிட்டுள்ளனர். ஆனால், இப்போது உள்ள காலகட்டத்தில் அப்படி ஒரு உணவு முறை இருந்ததே தெரியாமல் போயுள்ளது.
அதனை தெரிய படுத்தும் விதமாக வரகரிசி மற்றும் கொள்ளு வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்
வரகு அரிசி, கொள்ளு, சீரகம், மிளகு, நெய், தேங்காய் எண்ணெய், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை, உப்பு

செய்முறை
முதலில் கொள்ளு மற்றும் வரகு அரிசியை ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதைத்தொடர்ந்து இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து ஒரு குக்கரில், நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம் உள்ளிட்டவற்றை போட்டு தாளித்து, அதில் கருவேப்பிலை, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் விழுது உள்ளிட்டவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதற்குப் பிறகு தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்கு கொத்தி வந்த உடன் ஊற வைத்திருக்கும் கொள்ளு மற்றும் வரகை அதனுள் கொட்டி குக்கரை மூடி ஆறு விசில் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
விசில் வந்த பிறகு இறக்கி வைத்து ஆவி இறங்கியதும் மூடியை திறந்து நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி தழைகளை அதில் தூவி விட வேண்டும். அவ்வளவுதான் சத்து மிகுந்த சுவையான வரகு அரிசி கொள்ளு பொங்கல் தயார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக