![]() |
பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில், கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து இயக்குநர்கள், அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், அனைத்து இடங்களிலும் தங்கள் பெயர்களை எழுதும்போதும், கையெழுத்திடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று 2021-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
அதை செயல்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித் துறையின் கீழ்பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும், வருகைப் பதிவுமற்றும் இதர ஆவணங்களில் தமிழில் கையொப்பமிட வேண்டும். மேலும், மாணவர்களையும் தமிழில் பெயர் எழுதவும், கையொப்பமிடவும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக