![]() |
பள்ளிக்
கல்வித் துறையில் ஆசிரியா்கள் அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கான
முன்னுரிமைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி
அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும்
அனைத்து வகை ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த மே மாதமும்,
மனமொத்த மாறுதல் அண்மையிலும் நடத்தி முடிக்கப்பட்டன. தொடா்ந்து, இதர
துறைகளைச் சோந்த ஆசிரியா்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுவதற்கான அலகு
விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வை எமிஸ் தளம் வழியாக இணையதளத்தில் மேற்கொள்ள
திட்டமிடப்பட்டது.
இதற்கு விருப்பமுள்ள ஆசிரியா்கள் எமிஸ் தளம் வழியாக
விண்ணப்பிக்க கடந்த ஜூலை 1 முதல் 14-ஆம் தேதி வரை காலஅவகாசம்
வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, கலந்தாய்வுக்கான கால அட்டவணை தற்போது
வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான முன்னுரிமைப் பட்டியல் திங்கள்கிழமை முதல் வெளியிடப்படும். அதில் திருத்தங்கள் இருப்பின் ஜூலை 18-ஆம் தேதிக்குள் முறையிட வேண்டும். இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூலை 19-இல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஜூலை 20-இல் நடத்தப்படும். கலந்தாய்வின்போது உரிய வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக