Educational And Employment News

ஜூலை 23, 2023

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இனி தமிழ் மீடியத்திலும் படிக்கலாம். அரசு புதிய அறிவிப்பு

 

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இனி தமிழ் மீடியத்திலும் படிக்கலாம். அரசு புதிய அறிவிப்பு

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பயிற்றுவிக்க சி.பி.எஸ்.இ வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில் தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தி வழியில் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அரசியலமைப்பின் 8 ஆவது அட்டவணையில் பட்டியலிடப்பட்ட தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகளில் பயிற்றுவிக்க சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை 2020 (NEP) க்கு ஏற்ப கல்வி முறையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ வாரியம் தெரிவித்துள்ளது. புதிய தேசிய கொள்கை, மாணவர்களுக்கு பன்மொழியின் குறிப்பிடத்தக்க அறிவாற்றல் நன்மைகளை வலியுறுத்துகிறது, மேலும் மாணவர்களின் தாய்மொழியில் குறிப்பிட்ட கவனம் செலுத்துகிறது.

இதுகுறித்து சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'இளம் மாணவர்களுக்கான பன்மொழி அறிவின் முக்கியத்துவத்தையும் அறிவாற்றல் நன்மைகளையும் புதிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது. தொடக்க வகுப்புகள் முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மாற்று வழியாக இந்திய மொழிப் பயன்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.

பன்மொழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவது, தாய்மொழியைப் பயிற்றுவிப்பது, பன்மொழி அமைப்புகளில் கற்பிக்கும் திறன் வாய்ந்த ஆசிரியர்களின் இருப்பு, உயர்தர பன்மொழிப் பாடப்புத்தகங்களை உருவாக்குதல், குறிப்பாக இரு ஷிப்ட் அரசுப் பள்ளிகளில், கிடைக்கக்கூடிய குறைந்த நேரம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை முன்வைக்கிறது,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகளில் புதிய பாடப்புத்தகங்களைத் தயாரிக்குமாறு கல்வி அமைச்சகம் NCERT-க்கு உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் 22 பட்டியலிடப்பட்ட மொழிகளில் பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வகையில் NCERT பணிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்களைத் தயாரிக்கவும், ஆங்கிலம் தவிர இந்த மொழிகளின் மூலம் கற்றல்-கற்பித்தல் செயல்முறையைத் தொடங்கவும் தயாராகி வருகிறது.

மேலும், இந்திய மொழிகளை ஆய்வு செய்யவும் முடிவு செய்யவும். மேலும், தொழில்நுட்பம், மருத்துவம், தொழில் திறன், சட்டம் போன்றவற்றைப் படிக்கும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களும் இந்திய மொழிகளில் தயாரிக்கப்படுகின்றன. எனவே வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை தமிழ் வழியில் கற்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template