மாணவர்களுக்கு உடல்ரீதியாக தண்டனை வழங்கினால், சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடிப்பது, கைகளால் அடிப்பது உள்ளிட்ட பல்வேறு வகையான உடல்ரீதியான தண்டனைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
ஆனாலும், சில இடங்களில் ஆசிரியர்கள் அடித்து மாணவ - மாணவியர் காயம் அடைவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. கோவை ராஜவீதியில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த புகாரில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள ஆசிரியர்களின், வாட்ஸாப் குழுக்களில், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்களுக்கு உடல்ரீதியாக தண்டனை வழங்கக் கூடாது. அதை மீறி செயல்படுவதாக புகார் எழுந்தால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
Hi, This Is Kalvipoonka From Tamilnadu. I will update Educational news, General News regularly. This Blog Give You Ideas and Increase your knowledge update.
Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat, vel illum dolore eu feugiat nulla facilisis at vero eros et accumsan et iusto odio dignissim qui blandit praesent luptatum zzril delenit augue duis. Read More
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக