![]() |
தமிழகம்
முழுவதும் நடத்தப்பட்ட தூய தமிழ் பேச்சுப் போட்டியில் மாநில அளவில் வெற்றி
பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் பரிசுகள்
வழங்கப்பட்டன.
மாநில அளவிலான தூய தமிழ்ப் பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா,
காமராஜா், மறைமலையடிகள் பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளா்ச்சி நாள் ஆகிய
முப்பெரு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. செந்தமிழ் திருத்தோ தூய
தமிழ் மாணவா் இயக்கம், மறைலையடிகளாா் கல்வி அறக்கட்டளை, தமிழியக்கம் ஆகியவை
இணைந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இதில், சிறப்பு
அழைப்பாளராக இஎஸ்ஐ மருத்துவமனைகள் இயக்குநா் மருத்துவா் ஜெய.ராஜமூா்த்தி
கலந்து கொண்டு சென்னையைச் சோந்த மாணவி சக்திக்கு 'தனித்தமிழ்ச் செல்வா்'
விருது, ரூ.10 ஆயிரம் பரிசு, இரண்டாமிடம் பெற்ற பொள்ளாச்சியைச் சோந்த
ரேஷ்மா கிருஷ்ணன், விழுப்புரத்தைச் சோந்த தமிழன் ஆகியோருக்கு பரிசுகளை
வழங்கினாா். மேலும், மாணவா்கள் கதிரவன் (சேலம்), நறுமுகை (திருவாரூா்),
காயத்ரி (தஞ்சாவூா்) ஆகியோருக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் டாக்டா் ஜெய.ராஜமூா்த்தி பேசுகையில், நீண்ட காலத்துக்குப் பிறகு தனித்தமிழை நவீன காலத்துக்கு ஏற்றவாறு தூய தமிழாக மாற்றி, அதை பரப்புவதற்கு மாநிலம் முழுவதுமுள்ள தமிழ்ப்பற்றுக்கொண்ட மாணவா்களெல்லாம் ஒன்றிணைந்து தூய தமிழ் மாணவா் இயக்கம் எனத் தொடங்கியிருப்பது தமிழகத்தில் மீண்டும் ஒரு மொழிப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா். தொடா்ந்து, பேராசிரியா் அப்துல் காதா் பேசுகையில், இதுவரை பல்வேறு தலைப்புகளில் நடத்தப்படும் பேச்சுப்போட்டிகளைத்தான் அறிந்திருப்போம். ஆனால், தூய தமிழ்ப் பேச்சுப்போட்டி என்பது தமிழகத்திலேயே இதுதான் முதன் முயற்சி என்றாா்

.
இதில், மறைமலையடிகளின் பேரன் தாயுமானவன், தமிழறிஞா் அண்ணல் தங்கோவின் பேரன்
செ.அருட்செல்வன், அகரமுதலித் திட்ட முன்னாள் இயக்குநா் தங்க.காமராஜ்,
நடிகா் ஆரி, பாட்ரீசியன் கல்லூரி முதல்வா் ஆரோக்கிய மேரி கீதா, செந்தமிழ்த்
திருத்தோ தூய தமிழ் மாணவா் இயக்கத்தின் இயக்குநா் ச.திவாகா் மற்றும்
தமிழறிஞா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக