![]() |
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:இன்ஜினியரிங் படிப்புக்கான கவுன்சிலிங் ஜூலை 22ம் தேதி தொடங்குகிறது.
ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வும், துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 6 முதல் 8 வரையும் நடைபெறும். எஸ்.சி.ஏ., எஸ்.சி., பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 10, 11ம் தேதிகளில் நடைபெறும். ஒவ்வொறு கட்ட கலந்தாய்வுக்கும் மாணவர்களுக்கு 12 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.சிறப்பு பிரிவினருக்கான(7.5% இட ஒதுக்கீடு) கலந்தாய்வு, விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்தல், தற்காலிக இட ஒதுக்கீடு செய்தல் ஆகியவற்றை ஜூலை 22ம் தேதி செய்யப்படும். தற்காலிக இட ஒதுக்கீட்டை உறுதி செய்தல், இறுதி இட ஒதுக்கீடு ஆகியவற்றை ஜூலை 23ம் தேதி உறுதி செய்யப்படும்.சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வில் விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்தலை ஜூலை 24, 25 தேதிகளில் மேற்கொள்ளப்படும்.
தற்காலிக இட ஒதுக்கீடு செய்தல், தற்காலிக இட ஒதுக்கீட்டை உறுதி செய்தல் ஆகியவற்றை 26ம் தேதியும், இறுதி இட ஒதுக்கீடு செய்தலை ஜூலை 27ம் தேதியும் உறுதி செய்யப்படும்.7.5% இட ஒதுகீட்டில் 11,804 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 236 இடங்கள் கூடுதலாக நிரப்பப்படும். பதிவு செய்யப்பட்ட 430 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்கள் நிரப்பப்பட்டன. இந்த ஆண்டு கூடுதலாக 3100 இடங்கள் உள்ளன.
அனைத்தும் நிரப்பப்படும். மேலும் இந்த ஆண்டு இ.சி.இ., அட்வான்ஸ்டு டெக்னாலஜி, இ.சி.இ., டிசைன் அண்ட் டெக்னாலஜி ஆகிய படிப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்துக்கட்ட கலந்தாய்வும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக