![]() |
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் – வரும் 20ம் தேதி முதல் டோக்கன் மற்றும் விண்ணப்ப படிவங்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய உத்தரவு.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக வீடு வீடாக விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளன. ஆங்காங்கே உள்ள தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்நிலையில் இதற்காக மொத்தம் 20,000 தன்னார்வலர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு வரும் 20ம் தேதி முதல் டோக்கன் மற்றும் விண்ணப்ப படிவங்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக