![]() |
ஜூலை மாதம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. ஆன்லைன் பரிவர்த்தனை, கார்டு டிரான்ஸாக்சன் என அனைத்து பணப்பரிவர்த்தனைக்கும் வங்கியையே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் அடுத்த மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது.
இந்தியாவின் அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த விடுமுறை பட்டியல் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். குறிப்பிட்ட பண்டிகை மற்றும் உள்ளூர் விடுமுறை தினங்களில் மட்டும் இவை மாறுதல் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள்…
ஆகஸ்ட் 6 – ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 8 – காங்டாக் மண்டலத்தில் டெண்டாங் லோ ரம் ஃபாத் விழா
ஆகஸ்ட் 12 – 2வது சனிக்கிழமை
ஆகஸ்ட் 13 – ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 15 – சுதந்திரதினம்
ஆகஸ்ட் 16 – பார்சி புத்தாண்டு பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூர் மண்டலங்களில் உள்ள வங்கிகள் மட்டும் விடுமுறை
ஆகஸ்ட் 18 – ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி கௌகாத்தி வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 20 – விநாயகர் சதுர்த்தி
ஆகஸ்ட் 26 – 4வது சனிக்கிழமை
ஆகஸ்ட் 27 – ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 28 – ஓணம் பண்டிகை கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் இயங்காது.
ஆகஸ்ட் 29 – திருவோணத்தையொட்டி, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 30 – ரக்ஷ பந்தன் பண்டிகையையொட்டி, ஜெய்ப்பூர் மற்றும் சிம்லா மண்டலங்கள் வங்கிகள் விடுமுறை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக