![]() |
திருவாரூரில் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள மோட்டார் பைக் பரிசு வழங்கி அசத்திய முன்னாள் மாணவர்கள்.
நடுநிலைப் பள்ளியாக இருக்கும்போது பணியில் சேர்ந்த இவர், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ள நிலையில் ஆசிரியர்
பணியிலிருந்து இருந்து ஓய்வு பெற்றார். இவரிடம் பயின்ற மாணவர்கள் பலர் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உயர் பதவிகளில் உள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர் ராமன் ஓய்வு பெறுவதை அறிந்த முன்னாள் மாணவர்கள் ஆலங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பணி ஓய்வு பாராட்டு விழா நடத்தினர். விழாவில் கலந்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் ராமனின் கல்வி கற்பித்தல் முறையையும் கண்டிப்பையும் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தனர். இத்தகைய கண்டிப்பு இல்லையென்றால் தாங்கள் வாழ்க்கையில் முன்னேறி இருக்க முடியாது என்றும் உணர்ச்சியுடன் உரையாற்றினர்.
பின்னர் ஆசிரியர் ராமனுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மோட்டார் பைக் ஒன்றையும் பணி ஓய்வு பரிசாக வழங்கி அசத்தினர். அதுமட்டுமின்றி பெற்றோர்கள் பள்ளியின் தற்போதைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பல்வேறு
பரிசு பொருட்களை வழங்கி அவரை திக்கு முக்காட செய்தனர்.
தாய், தந்தை இருவரும் இந்த உலகத்தை அறிமுகப்படுத்தினார்கள் என்றால் அடிப்படை கல்வியை கற்றுத் தருகின்ற ஆசிரியர்கள்
இந்த உலகில் பயணிப்பதற்கான பாதையை காட்டுகிறார்கள். அறியாமை இருளை தனது அறிவின் ஒளியால் மற்றவர்களுக்கு
பாதை காட்டிய ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரது மனதிலும் குடியிருப்பவர்கள். அத்தகைய சிறந்த ஆசிரியர் பணியை
செவனே செய்த ராமனின் பணி ஓய்வு பாராட்டு விழா சக ஆசிரியர்கள் மத்தியிலும் மிகப்பெரிய உந்துதலை ஏற்படுத்தி உள்ளது

Good inspiration.
பதிலளிநீக்கு