தனியார்
பள்ளிகளுக்கான, 17 வகை கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழக நர்சரி,
பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச்
செயலர் நந்தகுமார் அறிக்கை:உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, 2011க்கு முன்
கட்டப்பட்ட பழைய பள்ளிகளுக்கு, கட்டட அனுமதி சான்று கேட்காமல், உரிய
அங்கீகாரம் வழங்க வேண்டும்.
சொத்து வரி, கட்டட வரி அதிகமாக கேட்டு, பள்ளி நிர்வாகிகளை அச்சுறுத்தி
பள்ளிகளுக்கு சீல் வைப்பதை நிறுத்த வேண்டும். புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள
தனியார் பள்ளிகள் விதிமுறை சட்டத்தின் புதிய நிபந்தனைகளை நீக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளுக்கு நியாயமான கல்வி கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். அரசு
பள்ளிகளில், ஒரு மாணவருக்கு அரசு செலவு செய்யும் தொகையையே, தனியார் பள்ளி
மாணவர்களுக்கும் கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும்.நர்சரி, பிரைமரி பள்ளிகளை
நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த ஆணை பிறப்பிக்க வேண்டும்.
மருத்துவர்களுக்கு உள்ளது போல, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு சட்டம் வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு தாமதமின்றி புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். அரசு பள்ளிகளுக்கு உள்ளதை போன்றே, தனியார் பள்ளிகளுக்கும் மின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்; கூடுதலாக வசூலிக்க கூடாது. இதுபோன்ற, 17 வகையான கோரிக்கைகள், சங்க கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக