
1 முதல் 3 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு..
1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு FA(B) இனிவரும் நாட்களில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையின் படி அனைத்து கட்டகங்களும் செயல்பாட்டிற்கு வந்து முதல் பருவ தொகுத்தறி மதிப்பீடு துவங்கும் காலம் வரை நமது செயலியில் செயல்பாட்டில் இருக்கும்.
நீங்கள் எப்பொழுது கட்டகத்தை கற்பித்து முடிக்கிறீர்களோ அதன் பின்னர் நமது செயலியில் வளரறி மதிப்பீடு ஆ மேற்கொண்டால் போதுமானது.
அதேபோல் 3 முதல் 6 வது கட்டகம் வரை மாதாந்திர தேர்வு எழுத்துத் தேர்வாக வைக்க தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கான வினாத்தாளும் ஜூலை 31ஆம் தேதி முதல் நமது செயலியில் கிடைக்கும் வகையில் செயல்பாட்டிற்கு வரும்.
இத்தேர்விற்கான end date வழங்கப்படவில்லை. நீங்கள் ஆறாவது கட்டகத்தை எப்பொழுது நிறைவு செய்கிறீர்களோ அதன் பின்னர் இத்தேர்வினை மேற்கொள்ளலாம்.
--- SCERT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக